ஏமாற்றம் !!!! அனைத்தும். ஆன் லைன் மூலம் முடிந்தது !

பொங்கல் பண்டிகையையொட்டி தென்மாவட்ட ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் பிறபகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளில் புறப்பட்டு செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக நேற்று அதிகாலை முதலே பயணிகள் வந்து குவிந்தனர். அங்கேயே படுத்திருந்த அவர்கள் காலை 7.30 மணிக்கு வரிசையில் நிற்க தொடங்கினர். ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.

5 நிமிடங்களில் முடிந்தது

காலை 8 மணிக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே குருவாயூர், திருச்செந்தூர், கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, முத்துநகர், பொதிகை, பாண்டியன், ராமேஸ்வரம் ஆகிய தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக் கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

வரிசையில் முதலில் நின்ற 5 பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. இதனால் நள்ளிரவில் இருந்து விடிய விடிய காத்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலானோர் ஆன்-லைனிலேயே டிக்கெட் முன்பதிவு செய்ததால் தான் டிக்கெட்டுகள் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்துள்ளது.

‘பிரீமியம்’ வேண்டாம்

இதனால் பல பயணிகளுக்கு காத்திருப்போர் பட்டியலில் தான் டிக்கெட் கிடைத்தது. அதிலும் பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். நேரம் செல்ல, செல்ல அனைத்து ரெயில்களிலுமே காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையும் அதிகரித்து 150-க்கு மேல் சென்றது. அதிகபட்சமாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் 294-ஆக இருந்தது.

ஏமாற்றத்துடன் திரும்பிய பயணிகள் கூறும்போது, ‘‘பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில்களை கடைசி நேரத்தில் அவசரமாக அறிவிக்காமல் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அதுவும் தீபாவளிக்கு அறிவிக்கப்பட்டது போல ‘பிரீமியம்’ ரெயில்களாக இல்லாமல் சாதாரண சிறப்பு ரெயில்களை முறையாக தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும்’’ என்றனர். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...