முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் விண்ணப்பம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு, சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான
அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு இந்த முறை சுமார் 2 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்த முழு விவரம் ஓரிரு நாள்களில் தெரியவரும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாவட்டத்தில் 16 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...