பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததால், இடம் கிடைக்காத மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த ஏ.இ.துர்கா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
நான் 2014-15-ஆம் ஆண்டு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தேன். எனக்கு மதுரையில் உள்ள பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரியை ஒதுக்கி உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், அன்றைய தினமே (செப்.30) கல்லூரியில் சேருமாறு கூறப்பட்டது.
அவ்வளவு குறுகிய நேரத்தில் யாராலும் மதுரைக்குச் செல்ல முடியாது என்பதால், அக்டோபர் 1-ஆம் தேதி கட்டணத்துடன் கல்லூரிக்குச் சென்றபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது எனத் தெரிவித்தனர். மேலும் காலியிடங்கள் எதுவும் இல்லை என்றும் பெஸ்ட் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
செப்டம்பர் 30-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி அன்றைய தினமே சென்னை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்திலிருந்து மதுரைக்குச் சென்று பெஸ்ட் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. எனவே, மதுரை பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தனியார் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில், தனக்கு வேண்டியவர்களை சட்ட விரோதமாக அனுமதித்துள்ளது.
அதேபோன்று, தேர்வுக் குழுவும் சம அளவில் தவறு செய்துள்ளது. பொதுவான சூழ்நிலையில், மனுதாரர் நிவாரணம் பெற உரிமை உள்ளது. ஆனால், இந்த வழக்கில் மனுதாரரை மருத்துவக் கல்லூரியில் நியமனம் செய்ய உத்தரவிடுவதற்கு எனக்கு இரண்டு தடைகள் உள்ளன. ஒன்று சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியிடங்கள் இல்லை. மற்றொன்று, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இதனால், புதிதாக மனுதாரருக்காக கூடுதல் இடம் ஒதுக்க உத்தரவிட முடியாது. தவறாக நிரப்பப்பட்ட அனுமதியையும் ரத்து செய்ய முடியாது.
தேர்வுக் குழு செய்த தவறினால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு என்னால் நிவாரணம் வழங்க முடியவில்லை. மேலும், கல்லூரியில் இடமும் இல்லாததால், மனுதாரர் எந்த நிவாரணம் இல்லாமல் வெளியேற முடியாது.
இது மனுதாரரின் தவறு அல்ல. தேர்வுக் குழு செய்த தவறு. செப்டம்பர் 30-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவால், மனுதாரரின் எதிர்காலம் பற்றிய கனவு சில மணி நேரத்தில் தகர்த்தெறியப்பட்டது.
அதனால், மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடமை தேர்வுக் குழுவுக்கு உள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்ககமும், தேர்வுக் குழுவும் நான்கு வாரங்களுக்குள் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.