குழந்தைகள் இறப்பு 18.9 சதவீதமாக சரிவு

தர்மபுரியில், 12 பச்சிளம் குழந்தைகளின் இறப்பு குறித்து, ஊடகங்கள் தான் பெரிது படுத்தி உள்ளன,'' என, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, 12 குழந்தைகள், நான்கு நாட்களில் பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் நேற்று இரவு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இவர்கள், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரக இயக்குனர் கீதாலட்சுமி உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தனர்.

அதை தொடர்ந்து, நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் இறந்ததற்கு மருத்துவ குறைபாடுகளோ, நோய் தொற்றோ காரணம் கிடையாது. இது தற்செயலாக நடந்த ஒன்று. தமிழகத்தில், 21 சதவீதம் இருந்த குழந்தைகள் இறப்பு சதவீதத்தை, தமிழக அரசு, 18.9 சதவீதமாக குறைத்துள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு அரசு மருத்துமனைகளின் பிரசவத்திற்கு சேர்ந்த கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, 1,000மாக இருந்தது. தற்போது, இது, 4,000மாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருவதால் தான், பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு என்றால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு மிகவும் மேசமான நிலையில் வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை காக்க, அரசு மருத்துவமனைகளில், இறுதி வரை முயற்சி செய்யப்படுகிறது.

தர்மபுரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பச்சிளம் குழந்தைகள் இறந்ததை, ஊடகங்கள் தான் பெரிது படுத்தி விட்டன. இங்கு, பயிற்சி நர்ஸ்கள் மூலம், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வில்லை.உரிய டாக்டர்கள், நர்ஸ்கள் மூலம் மட்டுமே, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிற மருத்துவமனைகளில் இருந்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, பச்சிளம் குழந்தைகளை சிகிச்சைக்கு கொண்டு வருவது போல் தான், இங்கிருந்தும், சில குழந்தைகள் மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளன. இங்கு தேவையான அளவு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில், 54 குழந்தைகள் குணமடைந்து, தாய் பால் குடிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளன. இங்கு, ஏதேனும் நோய் தொற்று இருக்க வாய்புள்ளதா எனவும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் விவேகானந்தன், டீன் நாராயணபாபு உட்பட பலர் உடன் இருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...