பழனி அருகே, இரண்டே முக்கால் அடி உயரமும், சுமார் 5 கிலோ எடையும் உள்ள 11 வயது மாற்றுத் திறனாளி மாணவர் 6 மணி நேரத்தில் 25 ஓவியங்களை வரைந்து சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் கருப்புச்சாமி- நாகேஸ்வரி தம்பதி. இவர்களது மகன்கள் சமயமூர்த்தி, சரண்குமார். ஆயக்குடி டிகேஎன் புதூரில் உள்ள விநாயக் வித்யாலயாவில் சமயமூர்த்தி 9-ஆம் வகுப்பும், சரண்குமார் 6-ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.
11 வயதாகும் சரண்குமார் இரண்டே முக்கால் அடி உயரம்தான் உள்ளார். எடை சுமார் ஐந்து கிலோதான். சரண்குமார் உடலில் ஏற்பட்ட ஜீன்களின் மாற்றத்தால் உயரமும், எடையும் குறைந்து, மாற்றுத் திறனாளியாக உள்ளார்.
சரண்குமார் பற்றி பள்ளித் தாளாளர் சிங்கராஜ் கூறுகையில், மாணவர் சரண்குமார் சரிவர படிக்காவிட்டாலும், ஓவியம் வரைவதில் அதிக ஆர்வமுடையவர். சோட்டா பீம், பென்டென் படங்களெல்லாம் வரையும் இவர், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில், சுமார் 25 அட்டைகளில் மரங்கள் வளர்த்தலின் அவசியம் குறித்து கண்காட்சிக்காக படம் வரைந்துள்ளார் என்றார்.
இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிபவர் சூர்யா. மாற்றுத் திறனாளியான இவர், கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி புதுச்சேரியில் தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சாதனையாளர்கள் சந்திப்பு, படக் கண்காட்சி, ஒரு கோடி மரம் நடுதல் சாதனை நடத்தப்பட உள்ளது.
பழனியிலிருந்து விநாயக் வித்யாலயா, கார்த்திக் வித்யா மந்திர் ஆகிய பள்ளிகள் இச்சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இதற்காக, மாணவர்கள் வரையும் படங்களை கண்காட்சிக்காக பெற்று வருகிறோம். இதில், மாற்றுத் திறனாளி மாணவர் சரண்குமாரின் படம் சாதனைக்காக தனியே கொண்டு செல்லப்படும். இதற்காக அவர், 6 மணி நேரத்தில் 25 வாழ்த்து அட்டையில் மரங்களின் படம் வரைந்துள்ளார் என்றார்.
மாணவர் சரண்குமார் கூறியபோது, ஓவியம் வரையும் ஆர்வம் தானாகவே வந்தது. அதிகமாக மயில் படம் வரையப் பிடிக்கும் என்றார்.