மருத்துவம் படிக்க வைக்க, வீட்டில் வசதி இல்லாததால், பெற்றோரிடம் சண்டையிட்டு, ஆட்டோ நிறுத்தத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை, போலீசார் மீட்டனர்.
பெருங்குடி அஞ்சுகம் அம்மையார் நகரை சேர்ந்தவர் ஜோசப், 40; தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி, சகாயமேரி,
35. அவர்களது மகள் கிரிஜா, 19; அவர் பிளஸ் 2 வரை படித்துள்ளார்.
நேற்று காலை திடீரென கிரிஜா, பெருங்குடி கல்லுக்குட்டை அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.
அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரி போக வேண்டுமா என, விசாரித்தனர். வேண்டாம் என, மறுத்தவர், மாலை வரை, அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதனால், ஆட்டோ ஓட்டுனர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்திய பின், கூறியதாவது:
கிரிஜா, தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர். 10ம் வகுப்பில், 471 மதிப்பெண்களும், பிளஸ் ௨வில், 1,126 மதிப்பெண்களை எடுத்துள்ளார். வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்துள்ளார். மருத்துவம் படிக்க விரும்பியுள்ளார். 'சீட்' கிடைக்கவில்லை.
இப்போது மருத்துவம் படிக்க விரும்பி வீட்டில் சண்டையிடுவதால், அவரது பெற்றோர், அவரை அடித்து வீட்டில் அடைத்து வைப்பதாக கூறுகிறார். தனியார் கல்லுாரியில் சேர்த்து படிக்க வைக்க, பெற்றோருக்கு வசதி இல்லை. மருத்துவம் படிக்கும் விருப்பத்தால், வெளியே
வந்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்