60 ஆயிரம் பேருக்கு பட்டம்

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 60 ஆயிரத்து 628 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்.



60 ஆயிரம் பேர்களுக்கு பட்டம்
சென்னை பல்கலைக்கழக 157–வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. துணை வேந்தர் பேராசிரியர். இரா.தாண்டவன் வரவேற்று பேசினார்.

விழாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கினார். வேலூர் சி.எம்.சி. பேராசிரியர் டாக்டர் குணசேகரனுக்கு டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் கொடுக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணகி பாக்கியநாதன், பேராசிரியர் தேன்மலர் பாரதி உள்பட 213 பேர் பிஎச்.டி.(ஆராய்ச்சி) பட்டம் பெற்றனர்.

பல்கலைக்கழக ரேங்க் எடுத்த 115 மாணவ–மாணவிகளுக்கு விருதுகளும், சிறப்பாக படித்த 71 பேர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் தபால் மூலமும் நிறைய மாணவர்கள் பட்டம் பெற்றனர். மொத்தத்தில் நேற்று 60 ஆயிரத்து 628 மாணவ–மாணவிகள் பட்டம் பெற்றனர். பட்டங்களை கவர்னர் கே.ரோசய்யா வழங்கி பாராட்டினார்.

விழாவில் பல்கலைக்கழக துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

யு.ஜி.சி. துணைத் தலைவர் தேவராஜ்
பல்கலைக்கழக துணைத்தலைவர் தேவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

பல்கலைக்கழக மானியக்குழு 11–வது ஐந்தாண்டு திட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக திட்டமிட்டு 138 ஆசிரியர்களை தேர்ந்து எடுத்தது. அவர்கள் பயிற்சி அளிக்கப்படுவார்கள். பயிற்சி பெற்றவர்கள் தேவை என்றால் தேவையான பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 12–வது ஐந்தாண்டு திட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆசிரியர் கல்வி மையத்தை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம்
இந்தியாவில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை 35 சதவீதத்தை அதிகரித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இதற்காக தமிழக முன்னாள் முதல் –அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்கலைக்கழக மானியக்குழு இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகtங்களாக 15 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். மேலும் இந்த 15 பல்கலைக்கழகங்களில் இருந்து 3 அல்லது 5 பல்கலைக்கழகங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு மேம்பட்ட பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்படும். இந்த பல்கலைக்கழகங்களில் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிக்காக நிதி ஒதுக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...