மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து 95% தேர்ச்சி எட்டப்பட வேண்டும் .கல்வி துறை செயலாளர் உத்தரவு!

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த கடந்த வருடம் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கடும் நடவடிக்கை எடுத்தார்.


மெதுவாக கற்கக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் அவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கும்
வகையில் தனியாக கையேடு அச்சடித்து அந்தந்த மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு விநியோகித்தது. அதைக்கொண்டு ஆசிரியர்கள் பாடம் கற்பித்தனர். அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. இந்த வருடம் 95 சதவீத தேர்ச்சி கொண்டு வர த.சபீதா முடிவு செய்துள்ளார்.

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் குறைந்த தேர்ச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அந்த 6 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அனைத்து பாடத்திலும் நன்றாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர்கள் ராஜேந்திரன், கருப்பசாமி, கார்மேகம், முதன்மை கல்வி அதிகாரிகள் அ.அனிதா, சாந்தி, பி.பொன்னையா, குமார், பாலமுரளி, சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

அரசு தேர்வில் எந்தெந்த பிரிவில் இருந்து கேள்விகள் எடுக்கப்படும் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக புளூபிரிண்ட்டை வகுப்பில் ஆசிரியர்கள் ஒட்டவேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்களிடம் எந்த பாடத்தில் எந்த பகுதியில் பலவீனம் உள்ளவர்கள், எதில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற படி அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி கொடுக்கவேண்டும். இப்படி செய்தால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

நேற்று பயிற்சி பெற்ற அந்த ஆசிரியர்களை கொண்டு அந்தந்த மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தனியாகவும், பிளஸ்-2 பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு தனியாகவும் இன்று (சனிக்கிழமை) பயிற்சி நடத்தப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...