விடைதாள்களை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் !!

பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


செப், அக்., 2014ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் துணைத் தேர்வு எழுதியோர் (student.has14rtv.in) என்ற முகவரியில் இன்று(நவ.,5) காலை 10 முதல் 6 ந்தேதி மாலை 5 மணிவரை தங்களது தேர்வு பதிவெண், விண்ணப்ப எண்களை பதிவுசெய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன்பின் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதே இணையதளத்தில் Application for Retotalling/ Revalution என்ற தலைப்பில் கிளிக் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தியான படிவத்தை 2 நகல்கள் எடுத்து நவ.,7 காலை 10 மணி முதல் 8ந்தேதி 1 மணிக்குள் உரிய சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை சி.இ.ஓ., அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...