ரயில்வே தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வழக்கு

ரயில்வே பணிக்கான தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த மனுவுக்கு எட்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ரயில்வே துறைக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ரயில்வே தேர்வு வாரியம் நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ரயில்வே பணிக்கான தேர்வை நடத்துகிறது.

இதற்கான அறிவிப்பாணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நான் "குரூப் டி' பிரிவுக்கான பணிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு வெளியான அறிவிப்பாணையின்படி, தேர்வு உடனடியாக நடத்தப்படும் என காத்திருந்தேன்.

ஆனால், அந்த அறிவிப்பாணைக்கு இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் ரயில்வே பணிக்கான தேர்வில் முறைகேடு நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் ரயில்வே தேர்வுக்காக 11 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில், 3 லட்சம் விண்ணப்பங்களைத் தேர்வு வாரியம் நிராகரித்தது. விண்ணப்பத்தில் சான்றொப்பம் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. சுய சான்றொப்பம் இட்டிருந்தாலும், இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் புகைப்படம் ஒட்டப்படவில்லை.

முன்னதாகவே, நிர்ணயிக்கப்பட்ட நபர்களை மட்டுமே தேர்வு எழுத தேர்வு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால், தேர்வு தொடர்பாக தேர்வு வாரிய நிர்வாகத்தில் முறைகேடு நடந்துள்ளது.

எனவே, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ரயில்வே தரப்பில் வழக்குரைஞர் ராம்குமார் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு எட்டு வாரங்களுக்குள் பதில் அளிப்பதற்கு ரயில்வேக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...