ஜன் தன் யோஜனா' திட்டத்தில் கோவை மாவட்டத்தில், இதுவரை, 1.89 லட்சம் பேர் வங்கி கணக்கு துவங்கியுள்ளனர்.
'ஜன் தன் யோஜனா' திட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி
கோவை மாவட்டத்தில், முன்னோடி வங்கியின் கீழ் அனைத்து வங்கிகளுக்கும் ஆக., 16ம் தேதியிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.ஒரு குடும்பத்தில், ஒருவருக்காவது வங்கி கணக்கு இருக்க வேண்டும் எனும் திட்ட நோக்கத்திற்கேற்ப, அருகிலுள்ள வங்கிகளை அணுகி பதிவு செய்யும் செயல்பாடு நடந்து வருகிறது. மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மற்றும் கூட்டுறவு என 40 வங்கிகள் மற்றும் அதன் 630 கிளைகளிலும் இதற்கான வேலைபாடுகள் தொடங்கப்பட்டன.
மாவட்டத்தில், 228 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட 767 வார்டுகள் உள்ளன. இதில், அந்தந்த பகுதியிலுள்ள வங்கி மற்றும் கிளைகளில், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கான பதிவுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றன.இதற்கான முகாம்கள், இறுதி சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. 'ரூபே டெபிட் கார்டு' எனும் ஒரு வங்கி கணக்காளருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான இன்ஸ்யூரன்ஸ் தொகை வழங்கல் மற்றும் ரூ.5 ஆயிரம் வரையில் கடன் பெறும் வசதி, ஏ.டி.எம்., கிரெடிட் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கணக்காளருக்கு, வங்கியே செய்து தருகிறது.கணக்காளர் தனது கணக்கில், மாதம் ஒரு முறை பணம் எடுத்தல், போடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளை தவறாமல் செய்தால் மட்டுமே கடன் தரப்படுகிறது. இதன் மூலம், வங்கி சேமிப்பு, டெபிட், கிரெடிட் கார்டு, செக் டிரான்ஸ்பர், டி.டி., எடுத்தல் உள்ளிட்ட அடிப்படை காரணிகளை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள முடிகிறது, என வங்கி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை முன்னோடி வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''ஜன் தன் யோஜனா' திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் வங்கிகளிலேயே செய்து தரப்படுகின்றன. வேறொரு வங்கியில் கணக்கு பதிவு செய்து கடன் மற்றும் ரூபி திட்டத்தின் மூலம் சலுகைகள் பெறும் ஒருவர், மற்றொரு வங்கியில் கணக்கு பதிவு செய்து மறுபடியும் இச்சலுகைகள் பெறுவதற்கு தகுதியற்றவர் ஆவார்.இத்திட்டத்திற்கான கணக்கெடுப்பு கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதித்துறை அமைச்சகத்திலிருந்து அறிவிக்கப்பட்டப்படி, கணக்கெடுப்புகளை விரைவில் முடிக்க அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,' என்றார்.
வங்கி மேலாளர்கள் கூறுகையில், 'ஒரு குடும்பத்தில், ஒருவருக்காவது வங்கி கணக்கு இருக்க வேண்டும் எனும் மத்திய அரசின் திட்டத்தை அனைத்து வங்கிகளிலும் பின்பற்றி வருகிறோம். கிராம மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை, வங்கி அலுவலர்கள் வீடுதோறும் சென்று ஏற்படுகின்றனர். இதற்கான கணக்கெடுப்பு பணியை விரைவில் முடிக்க துரிதமாக செயல்பாடுகள் நடக்கின்றன,' என்றார்