மீண்டும் துவங்கியது ஆதார் அட்டை பணி துவங்கியது !!!

கடலூர் மாவட்டத்தில், நான்கு தாலுகாவில் ஆதார் அடையாள அட்டை பதிவுக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.மத்திய, மாநில அரசுகளின் உதவிகளைப் பெற பொதுமக்களுக்குத் தேவையான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அடையாள அட்டை உள்ளது.
பொதுமக்கள் ஆதார் அட்டை பெற வசதியாக அவர்கள் வசிக்கும் இடங்களில் தற்காலிகமாக சிறப்பு முகாம் நடந்தது.கடலூர் மாவட்டத்தில், ஐந்து வயதிற்குட்பட்ட 23 லட்சத்து 87 ஆயிரத்து 173 பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 17 லட்சத்து 28 ஆயிரத்து 152 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து ஆதார் அட்டை பதிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி ஆகிய தாலுகா அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. நகரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்தந்த தாலுகாவுக்குட்பட்ட நகராட்சி அலுவலகங்களிலும், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தாலுகா அலுவலகங்களிலும் புகைப்படம் எடுக்கப்படும்.

மூன்று மாதங்களில் வீடுகளில் நேரிடையாக அடையாள அட்டை வழங்கப்படும். ஆன்-லைன் மூலமாக அட்டை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புகைப்படும் எடுக்கப்படும். பெயரை பதிவு செய்யாதவர்களுக்கு படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.புகைப்படம் எடுக்க தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான ரசீது, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் <<உரிமம், வங்கி கணக்கு மற்றும் பாஸ்போர்ட் எண், பேன்கார்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை ஆகியவைகளை ஆவணங்களாக கொண்டு வர வேண்டும். இதில், குறிப்பாக, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி ஆகிய தாலுகாவில் புகைப்படம் எடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...