ரூ.1.3 லட்சத்தில் பயின்ற பள்ளிக்கு தாகம் தீர்த்த பழைய மாணவர்கள்

காரைக்குடி முத்துப்பட்டணம் மு.வி.அரசு மேல்நிலை பள்ளியில் 1990-92ம் ஆண்டு பயின்ற பழைய மாணவர்கள், பள்ளிக்கு ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் செலவில் குடிநீர் வசதி செய்து கொடுத்தனர்.

காரைக்குடி முத்துப்பட்டணம் மு.வி.அரசு மேல்நிலைபள்ளியில் 1990-92ல் பயின்ற 32 மாணவர்கள், கடந்த ஆகஸ்ட்24ல் சந்தித்து மலரும் நினைவை பகிர்ந்து
கொண்டனர். அப்போது, தாங்கள் படிக்கும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள கட்டடத்தில் உள்ள போர்வெல் 100 மீட்டர் ஆழத்தில் பல ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. நீர்மட்டம் குறைந்துள்ளதால் குடிநீர் தொட்டி நேரம் ஆகிறது. எனவே புதிய போர்வெல் அமைத்து மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர' கோரினார்.இதையடுத்து பழைய மாணவர்கள், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய போர்வெல், ஆறு குடிநீர் பைப், மின் மோட்டார், ஆயிரம் லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றை அமைத்து கொடுத்தனர். குடிநீர் திட்டத்தை காரைக்குடி எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமி திறந்து வைத்தார்.பழைய மாணவர்கள் உடையப்பன், ராஜேஷ் கண்ணன் கூறும்போது: 270 அடி ஆழத்தில் போர்வெல் அமைத்து கொடுத்துள்ளோம். மேலும் ரூ.ஒரு லட்சம் வசூல் செய்து, அதில் வரும் வட்டித்தொகை மூலம் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...