ஆதார், உள்தாள், வாக்காளர் அட்டை பெற பொதுமக்கள் அலைக்கழிப்பு! வேலையை தவிர்த்து வரிசையில் காத்திருக்கும் கொடுமை

தமிழகம் முழுவதும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்தாள் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, இவற்றை பெறுவதற்காக, பொதுமக்கள், தங்களுடைய வேலைகளை தவிர்த்து, அரசு அலுவலகங்களில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய கொடுமை உள்ளது. சரியான வழிகாட்டுதலை, மத்திய, மாநில அரசுகள் விளக்காததால், மக்கள் பலர்
அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.

சமையல் காஸ் மானியத்தொகையை, சம்பந்தப்பட்ட பயனாளியின், வங்கி கணக்கில் சேர்க்கும் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, வங்கி கணக்கு எண்ணையும், ஆதார் அடையாள அட்டை நகலையும், காஸ் ஏஜன்சிகளில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பலருக்கு ஆதார் அட்டை என்பதே இல்லை. மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், என்ன செய்வதென தெரியா மல் புலம்பி வருகின்றனர்.ஆதார் அட்டை எடுக்கும் பணி, ஒவ்வொரு தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் நடந்தாலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ரசீதை எடுத்து வந்தால் தான், ஆதாருக்கான கருவிழி, கைரேகை பதிவு செய்யப்படும் என, அதன் ஊழியர்கள் கூறுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழகத்தில் சரிவர நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே, ரசீது இல்லாதவர்கள், எவ்வாறு ஆதார் அட்டை பெறுவது என்பது குறித்து, மத்திய அரசும், மாநில அரசும் விளக்கம் அளிக்கவில்லை.

ஒரு நாள் வேலையை தவிர்த்து, ஆதார் அட்டைக்காக, அரசு அலுவலகங்களில் மக்கள் காத்து கிடக்கின்றனர். அங்கு, ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அவர்களை விரட்டி அனுப்புகின்றனர். மனஉளைச்சலுக்கு ஆளாகும் அவர்கள், என்னசெய்வதென தெரியாமல் தடுமாறுகின்றனர். ஆதார் அட்டைக்கான டெண்டர் எடுத்த நிறுவனமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ, மக்கள் தெளிவுபெறும் வகையிலான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.அதேபோல், ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி, இதுவரை தொடங்கப்படவில்லை. 2014ம் ஆண்டு முடிய, இன்னும், மூன்று வாரங்களே உள்ளது. மாநில அரசு, உள்தாள் இணைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டாலும், ரேஷன் கடைகளில் அதற்கான பணி துளியளவு கூட நடக்கவில்லை. ஸ்மார்ட் கார்டு திட்டத்தை சொல்லி நாட்களை கடத்தி விட்டனர்.

தற்போது, உள்தாள் இணைப்பு வழங்கினால் தான், ஜனவரி மாதம் பொருட்கள் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். அரசு, அலட்சியம் காட்டாமல், பொதுமக்களை அலைக்கழிக்காமல், உள்தாள் இணைப்புக்கான பணியை விரைவில் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.மேலும், வண்ண வாக்காளர் அடையாள அட்டை திட்டம், ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே, அடையாள அட்டையை தொலைத்தவர்கள், புதிய அட்டை கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாகியும், அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. வண்ண அடையாள அட்டை, புதிய வாக்காளர்களுக்கு தான், பழைய நபர்களுக்கு இல்லை என்ற தகவல் உள்ளது. ஆதார் அட்டைக்காகவும், ரேஷன் கார்டு உள்தாளுக்காகவும், வாக்காளர் அட்டைக்காகவும், பொதுமக்கள், பிழைப்புக்கு செல்வதை தவிர்த்து, தினந்தோறும், அரசு அலுவலகங்களை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்க வேண்டியது, அதிகாரிகளின் கடமை. தினசரி கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துவோர், அலைக்கழிப்பதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...