அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்த 190 மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர்கள் ஆமிரா பாத்திமா உள்பட 190 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
நாங்கள் அனைவரும் 2013-14 ஆம் கல்வியாண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தோம். இதற்கான கட்டணமாக ரூ. 5.54 லட்சம் செலுத்தினோம்.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள், தவறான நிர்வாகத்தின் காரணமாக பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தமிழக அரசு எடுத்துக் கொண்டது.
அப்போது, 2014-15-ஆம் கல்வியாண்டு தொடங்கியது. மருத்துவக் கட்டணமாக முதலில் நாங்கள் செலுத்திய அதே கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவிப்பு வெளியானது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில், பல்கலைக்கழகம் வந்த பிறகும் அதே கட்டணம் செலுத்தக் கோரப்படுகிறது.
பல்கலைக்கழகத்தை அரசு நிர்வகிக்கும் போது, அரசுக் கட்டணத்தை விட அதிகமான கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை (ரூ.12,290) மட்டும் வசூலிப்பதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர், வழக்குரைஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆஜராகி, கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த பல்கலைக்கழகம், நிர்வாகச் சீர்கேட்டால் தற்போது நிதிப் பாற்றக்குறையில் உள்ளது.
இப்போது, கட்டணத்தைக் குறைத்தால் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்படும் என வாதிட்டனர்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 2014-ஆம் ஆண்டு ஜூலை 31 நிலவரப்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் ரூ.385 கோடி எதிர்மறை இருப்பில் உள்ளது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு நிதி உதவி பெறாமல், பல்கலைக்கழகத்தின் சொந்த நிதியில் தொடங்கப்பட்டது.
தற்போது இதன் நிதி நிலைமை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது போல் உள்ளது. கட்டணத்தைக் குறைக்க முயற்சித்தால், கல்லூரியை மூடும் நிலை ஏற்படலாம்.
எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.