இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடி தேவைப்படுவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய ரயில்வேயை மேம்படுத்த அடுத்த 3 முதல் 4
ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் (ரூ. 6 லட்சம் கோடி) தேவைப்படுகிறது. அதை பெறுவதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதை உறுதிப்படுத்துவதற்காக நிதியமைச்சகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிடமும் இணைந்து ரயில்வே பணியாற்றுகிறது. இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணிகள், சேவையில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். ஆனால் பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசிடம் பணம் இல்லை.
ரயில்வே துறையை பொறுத்தவரையில், அமெரிக்காவை ஒப்பிடும் போது, நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். ரயில்வேயில் முதலீடு செய்ய மத்திய அரசிடம் போதுமான பணம் இல்லை என்பதே உண்மை. எனவே முதலீடுகளை திரட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டை திரட்டுவதற்காக நாங்கள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து தற்போது வெளிப்படையாக தெரிவிக்க விரும்பவில்லை. ரயில்வேயின் அதிகாரங்கள், ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும், அவர்களின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடமும் வழங்கப்படும். நான் அதில் தலையிடப் போவதில்லை. அவர்கள் ஒழுங்காக வேலை பார்க்கிறார்களா என்பதை உறுதி செய்வது மட்டுமே என பணி. இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.