மாநகராட்சி பள்ளியில், ஒரே தட்டில், நான்கு பேர் சேர்ந்து சாப்பிடும் அவல நிலை நீடிக்கிறது.
வியாசர்பாடி கல்யாணபுரத்தில், மாநகராட்சியின் கீழ் இயங்கும் துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்ளன. இங்கு, 1,400 மாணவ, மாணவியர்
பயில்கின்றனர். தினமும், மதிய உணவு திட்டத்தில், 450 முதல் 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, தட்டுகள் தட்டுப்பாட்டால், ஒரே தட்டில், நான்கு பேர் சேர்ந்து சாப்பிடும் அவல நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து, சத்துணவு ஊழியர் ஒருவர் கூறுகையில், "சாப்பாடு தட்டுகள் போதுமான அளவில் இருந்தன. காலப்போக்கில் தட்டுகள் மாயமானதால், தட்டுப்பாடு உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்" என்றார்.