மதிய உணவுக்கு தேவையான காய்கறிகளை பள்ளி வளாகத்தில் உற்பத்தி செய்து, ஆரம்ப பள்ளி மாணவர்கள் முன் மாதிரியாக திகழ்கின்றனர்.
கேரளாவில் பள்ளிகளை பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என
கல்வித்துறை வலியுறுத்தி வருகிறது. படிப்பு நேரம் தவிர, பிற நேரங்களில் பெரும்பாலான பள்ளி வளாகங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் காய்கறி மற்றும் பூந்தோட்டங்களை அமைத்துள்ளனர்.
இதில் மூணாறு அருகில் கன்னிமலை எஸ்டேட்டில் உள்ள அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளி மாணவர்கள், முன் மாதிரியாக திகழ்கின்றனர். இங்கு 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள சிறிய இடத்தை தோட்டமாக மாற்றி இங்கு கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், மல்லி, வெங்காயம் உள்பட பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்துவருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் பள்ளியில் மதிய உணவுக்கு பயன்படுத்துகின்றனர். முற்றிலும் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால், தற்போது பீன்ஸ் நன்கு காய்த்துள்ளது. இந்த தோட்டத்தை உருவாக்குவதற்கு ஆசிரியைகளும் ஒத்துழைப்பு அளித்து வருவதாக தலைமை ஆசிரியர் மோகன் கூறினார்.