சமையல் எரிவாயு மானியம் பெற "ஆதார்': மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவதால் பெட்ரோலியத் துறைச் செயலர், ஓஎன்ஜிசி தலைவர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


சிவகாசியைச் சேர்ந்த ஆனந்தமுருகன் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மானிய நிதி உதவியைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் திட்டத்துக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் ஆதார் எண்ணை மத்திய அரசு கேட்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜனவரி 23-இல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய பெட்ரோலியத் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, சமையல் எரிவாயு முகவர்கள் ஆதார் எண்களை டிசம்பர் 31-க்குள் வங்கிக் கணக்குடன் இணைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதனால், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்கள் ஆதார் புகைப்படம் எடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆதார் எண் இல்லை என்பதால் எந்த ஒரு பயனாளிக்கும் மானிய உதவியை நிறுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், மத்திய பெட்ரோலியத் துறையின் நடவடிக்கை இந்த உத்தரவுகளை மீறுவதாக உள்ளது. எனவே, மத்திய பெட்ரோலியத் துறை செயலர் சவுரப் சந்திரா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு கழகத் தலைவர் (ஓஎன்சிஜி) தினேஷ் கே.ஷரப் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வி.தனபால், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே ஆதார் எண் தொடர்பான மனு நிலுவையில் உள்ளதால், இரு மனுக்களையும் சேர்த்து விசாரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டு விசாரணையை வருகிற 22-க்கு ஒத்திவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...