குடும்ப அட்டை தாள்கள் ஒட்ட சிறப்பு ஏற்பாடு !

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை அடுத்த ஆண்டுக்கு (2015) நீட்டிக்கும் வகையில், அட்டையில் உள்தாளை ஒட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.


ஒவ்வொரு அட்டைதாரருக்கும் குறிப்பிட்ட நாள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பணிச்சுமை காரணமாக, அந்த நாளில் செல்ல முடியாவிட்டாலும் அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 1.95 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 10 லட்சம் பேர் எந்தப் பொருளையும் பெறாத அட்டைதாரர்கள் ஆவர். அனைத்து அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஓராண்டுக்கு (2015) நீட்டிக்கும் வகையில், அதனுள் உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, உள்தாள் ஒட்டும் பணி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் திங்கள்கிழமை தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் எத்தனை பேர்? நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஒவ்வொரு நாளும் சுமார் 125 முதல் 150 அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படுகிறது.

உள்தாள் ஒட்டும் பணி குறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:

குடும்ப அட்டைகள் அதிகமாக இருக்கும் கடைகளில் நாளொன்றுக்கு சுமார் 200 அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அட்டைதாரருக்கும் குறிப்பிட்ட நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் செல்ல முடியாவிட்டால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. மறுநாளோ அல்லது எந்த நாளில் கூட்டம் குறைவாக இருக்கிறதோ அந்த நாளில் நியாய விலைக் கடைக்குச் சென்று உள்தாளை பெற்றுக் கொள்ளலாம்.

சனிக்கிழமை பெறலாம்: திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலகப் பணிக்காகச் செல்பவர்கள், நியாயவிலைக் கடைக்கு சனிக்கிழமை சென்று உள்தாளைப் பெறலாம். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் பணிச்சுமை காரணமாக செல்ல இயலாதவர்களே சனிக்கிழமை செல்ல வேண்டும்.

திங்கள்கிழமை தொடங்கிய உள்தாள் ஒட்டும்பணியின் போது, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த ஒவ்வொரு கடையிலும் தலா இரண்டு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உள்தாள் ஒட்டுவதற்கான காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. அடுத்த மாதத்துக்குள் பணியை முடிக்க நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்தப் பொருளும் வேண்டாதோர்: எந்தப் பொருளையும் பெறாத குடும்ப அட்டையை வைத்திருப்போர் இணையதளம் வாயிலாகவே தங்களது அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள ஏற்கெனவே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் (www.consumer.tn.gov.in)தங்களது அட்டையைப் புதுப்பிக்கலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...