ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் தரும் அரசாணையை நீக்க வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்நடந்த கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலர்
விஜயகுமார், பொருளாளர் வேலாயுதம், தேர்வுச் செயலர் ரமேஷ், இணைச் செயலர் கலிவரதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில மதிப்பியல் தலைவர் ராமலிங்கம் பேசினார். அதில், அனைத்துப் பள்ளிகளையும் இணைத்து மன்றத் தேர்வு நடத்துவது. மாணவர் நலன் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 100சதவீதம் தேர்ச்சி வழங்க பாடுபடுவது. திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாடவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய அருண் விஜய் எம்.பி.,க்கு பாராட்டுதெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .