பிரச்சினைகளை பார்த்து பயம் கொள்ள வேண்டாம் !

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. அதனைக் கண்டு பயப்படாமல் அதற்கான தீர்வு என்ன என்பதை பார்க்க வேண்டும். அரசர் ஒருவருக்கு திடீரென்று ஒருநாள் பட்டத்து யானை எவ்வளவு எடை
இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்த காலத்தில் எடை மேடைகளோ, யானைகளை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசோ கிடையாது. எப்படி அளப்பது என்று அமைச்சரிடம் கேட்க அவருக்கும் வழி தெரியவில்லை. அந்த நேரத்தில் அமைச்சரின் 10 வயது மகன், "நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். எல்லோரும் கிண்டலாகச் சிரித்தனர். ஆனாலும் மன்னர் ஒரு வாய்ப்பு கொடுத்தார். சிறுவன் யானையை நதிக்கு அழைத்துச் சென்று பெரிய படகில் ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே தண்ணீர் நனைந்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு யானையைப் படகில் இருந்து இறக்கிவிட்டு பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்வரை கற்கள் ஏற்றப்பட்டன. கற்களை மன்னனிடம் காட்டி, "அவற்றின் எடை தான் யானையின் எடை' என்ற சிறுவனைப் பார்த்து அனைவரும் வியந்தனர். அங்கிருந்தவர்கள் எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத் தான் பார்த்தார்கள். ஆகவே எடையைக் கணிக்க முடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. சிறுவனோ பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான். எளிதில் விடை கண்டான். அதுபோல தான் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் அதனைச் சின்னச்சின்ன செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒட்டுமொத்த பிரச்னையையும் திறம்பட சரி செய்து விடலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...