குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி, தமிழகம் முழுவதும் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், துறையின் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் சென்னையில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது:
இப்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்தாள் ஒட்டும் பணி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை 1 கோடியே 91 லட்சத்து 94 ஆயிரத்து 781 அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நிறைவடைந்துள்ளது. இது மொத்தமுள்ள அட்டைகளில் 97 சதவீதமாகும்.
உள்தாள் இணைப்பு பெறுவதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படாததால் மீதம் உள்ள குடும்ப அட்டைதாரர்களும் விரைவில் தங்களின் அட்டைகளை உள்தாள் ஒட்டி பெற்றுக் கொள்ள வேண்டும். இதை உணவுத் துறை அலுவலர்களும் விரைவுபடுத்த வேண்டும்.
எந்தப் பொருளும் வேண்டாத ஏனைய அட்டைதாரர்களும் அவர்களுடைய அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ள இணையதளத்தில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களின் குறைகளைக் களைவதற்கு குறைதீர் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது அன்று மாலைக்குள் தீர்வு காணப்படுகிறது. கடந்த 10-ஆம் தேதி வரை இந்த முகாம்களின் மூலம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 173 மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர்.
கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முகாமில் மட்டும் பெறப்பட்ட 11 ஆயிரத்து 473 மனுக்களில், 11 ஆயிரத்து 103 மனுக்கள் மீது அன்றே தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 43 ஆயிரத்து 642 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3 லட்சத்து 48 ஆயிரத்து 25 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருள்களின் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதுவரை 21 ஆயிரத்து 508 பேர் கைது செய்யப்பட்டு, அவற்றில் 632 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத் துறைச் செயலாளர் முகம்மது நசீமுத்தின், உணவுப் பொருள் வழங்கல் துறை சூ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.