மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கருவனுார் அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம் இடியும் நிலையில் உள்ளதால், வகுப்புகளை புறக்கணித்து மரத்தடி நிழலில் மாணவர்கள் பாடம் படிக்கின்றனர்.
இப்பள்ளி 1935ல் கட்டப்பட்டது. 450 பேர் படிக்கின்றனர். மாணவர்கள்
எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக ஓட்டுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. பழைய கட்டடத்தில் 7, 8ம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர். கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் மேல் பல்வேறு மரங்கள் வேரூன்றி வளர்கின்றன.
இவற்றின் வேர்கள் மேற்கூரையை சேதப்படுத்தி உள்ளதால் சுண்ணாம்புக்காரை பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பயந்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மரத்தடி நிழலில் படிக்கின்றனர். இக்கட்டடத்தை புதுப்பிக்கும்படி மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உயிர் பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டடத்தை புதுப்பிக்க முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ராமர்: கட்டடத்தை சீர் செய்து கொடுக்கும்படி 2011, 2012ல் இருமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். எந்த பயனும் இல்லை. பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அருகில் உள்ள தண்ணீர் தொட்டி இடியும் நிலையில் உள்ளது. பள்ளியை சுற்றி மழை, கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. கட்டடத்தை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றார்.