ஆங்கிலம் கற்றுத்தர ஆசிரியர்கள் மறுக்கின்றனர் ,மாணவர்கள் புகார் !

ஆங்கிலம் கற்றுத்தர ஆசிரியர்கள் மறுப்பதால், பொதுத்தேர்வுக்கு தயாராவதில் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக, கோவை, நாதேகவுண்டன்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், நேற்று முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 19 முதல் பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் போட்டியிட்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்குவதுடன், மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், எங்களுக்கு, ஆங்கிலம் சரியாக கற்றுத்தர ஆளில்லை. ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் ஆங்கில இலக்கணம் புரியவில்லை. சிறந்த முறையில் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாதேகவுண்டன்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள், பெரும்பாலும் ஆங்கில பாடத்தை சிரமமாக கருதுகின்றனர். இந்நிலையில், பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஆங்கில பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்க மறுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் கூறுகையில், "ஆங்கில பாடம் முறையாக கற்பிப்பதில்லை. இலக்கணங்கள் ஒன்றும் புரியவில்லை. புரியாதவற்றை கேட்டால், குறிப்பிட்ட நோட்ஸ் வாங்கி படியுங்கள், அதில் புரிந்ததை மட்டும் எழுதுங்கள் எனறு கூறுகின்றனர். பிற பாடத்தை போன்ற ஆங்கில இலக்கணத்தை மனப்பாடம் செய்ய முடியாமல், புரிந்துகொள்ளவும் முடியாமல் சிரமமாக உள்ளது. ஆங்கில இலக்கணத்தை முறையாக நடத்தும்படி கூறியுள்ளோம்" என்றனர்.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "மாணவர்களின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தலைமையில் குழு, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வுகள், மாதிரி தேர்வுகள், வகுப்பு பாட குறிப்பேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்வதுடன், மாணவர்கள் அனைவரிடமும் விசாரிக்கப்படும். புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...