டெங்கு உள்ளதா என கல்லூரி மாணவர்கள் ஆய்வு !

அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், மிளகுப்பாறை பகுதியில், அடிப்படை வசதிகள், டெங்கு பாதிப்புகள் உள்ளனவா என்பது பற்றி ஆய்வு செய்தனர்.திருச்சி, கி.அ.பெ., விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில், இரண்டாம்
ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள், 20 பேர், என்டமாலஜி துறை அலுவலர் கேத்ரீன் தலைமையில், நேற்று காலை மிளகுப்பாறை பகுதியில் சுகாதாரம், அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.வீடுகள் தோறும் நேரில் சென்ற மாணவிகள், பொதுமக்களின் வீடுகளின் அமைப்பு, வேலை, படிப்பு, வருவாய், குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா, பயன்படுத்தும் உப்பு போன்றவற்றை ஆய்வு செய்தனர்.மேலும், அடிப்படை வசதிகள் உள்ளனவா, நோய் பரப்பும்படி குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதா, தோல், கண்பார்வை, காய்ச்சல் மற்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து கேட்டறிந்தனர்.அடிப்படை வசதிகள், நோய் பாதிப்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்படும், என்று மருத்துவத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...