தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை அமல்படுத்தத் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் டி. கிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
அரசியலமைப்புச் சட்டப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவ்வாறு நியமிக்கும் முன்பு அவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை ஆலோசிக்க வேண்டும்.
இதில், அரசியல் குறுக்கீடு இருக்கக் கூடாது என்ற அச்சம் காரணமாக இந்த நடைமுறை அரசியமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டது.
நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்தபோதும், நீதிபதிகள் குழுதான் தேர்வு நடைமுறையில் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் நீதிபதிகள் தேர்வில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பங்கு பெற வழிவகுக்கிறது.
இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 7 ஷரத்துகளில் திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றுவதாக உள்ளது. இதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
புதிய சட்டத்தை அமல்படுத்தினால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும். தேவைப்பட்டால் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொலிஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக்குழுவின் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றலாம். அதை தவிர்த்து நீதித்துறையின் அதிகாரத்தையே பறிப்பது சட்டவிரோதமானது.
எனவே, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை அரசிதழில் அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும். மேலும், சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.