என்.சி.டி.இ. வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

 நாடு முழுவதும் வழங்கப்படும் 15 வகையான ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கான புதிய வழிகாட்டுதலை "என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014' என்.சி.டி.இ. அண்மையில் வெளியிட்டது.

 அவற்றில் இடம்பெற்றுள்ள 9 வகையான படிப்புகள் பல்கலைக்கழகங்களின் கீழ் வருகின்றன. எனவே, இந்தப் படிப்புகளில் என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதலின்படி தேவையான மாற்றங்களைக் கொண்டுவர அதன் தலைவர் சார்பில் ஏற்கெனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

 புதிய வழிகாட்டுதலின்படி, இந்த 9 படிப்புகளின் பெயரில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகங்கள் முன்பு உள்ள பெயரிலேயே இந்தப் படிப்புகளை வழங்கலாம்.

 ஆனால், பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பதும், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியியல் படிப்புகளின் படிப்புக் காலத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றமும் புதிதாகும். இதுதொடர்பாக யுஜிசி சார்பில் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.

அதே நேரம், ஆசிரியர் கல்வியியல் கல்வியின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு வருகிற 2015-16 கல்வியாண்டில் என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதலில் உள்ள செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...