உடலுறுப்பு தானம்: தமிழகம் முன்னிலை

மூளைச்சாவு அடைந்தோரின் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட 10 மடங்கு முன்னிலை வகிப்பதாக, தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். உடலுறுப்பு தானம் குறித்த பணியில்
ஈடுபட்டு வரும் மோகன் அறக்கட்டளை, இங்கிலாந்தைச் சேர்ந்த என்.எச்.எஸ்.பி.டி. அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதற்கான நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

உடலுறுப்பு தானத்தில் தமிழகம் பிற மாநிலங்களைக் காட்டிலும் 10 மடங்கு முன்னிலை வகிக்கிறது. ஆனாலும், உடலுறுப்பு தானத்தில் ஈடுபடும் பிற நாடுகளை ஒப்பிடும்போது நாம் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவையில் உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டு, பிறருக்கு பொருத்தப்படுகின்றன. மதுரையிலும் சிறிய அளவில் நடைபெற்று வருகிறது. பிற மாவட்டங்களிலும் உடலுறுப்பு தானத்தையும், உடலுறுப்பு மாற்ற அறுவைச் சிகிச்சையையும் மேற்கொள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், பிற அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானம் பெறுவதற்கான ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உடலுறுப்பு தானம் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...