வாகன நம்பர் பிளேட்; போலீஸ் எச்சரிக்கை

அனுமதிக்கப்படாத வாகன நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து விதிப்படி பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் சில வாகனங்களில் நம்பர்பிளேட்டில் 'ஐ.என்.டி.' என
எழுதப்பட்டிருப்பதோடு, 'ஹாலோகிராம்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வகை வாகனங்களுக்கு ஒருவாரமாக போலீசார் தலா ரூ.100 அபராதம் விதித்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: ஒரு வாகனத்தின் முழு விபரத்தையும் அறியும் வகையில் ஐ.என்.டி., ஸ்டிக்கர் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் சிலர் இவ்வகை ஸ்டிக்கரை ஒட்டி தந்து மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதன் அடிப்படையிலேயே அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வகை ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்ததாக 2 பேர் மீது சுப்பிரமணியபுரம் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிப்படி இல்லாத நம்பர் பிளேட் பொருத்தியுள்ள வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...