பொதுத்தேர்வு எழுத பயமா?; டயல் செய்யுங்க ‘104’

இதுதொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு சமயத்தில் பின்பற்ற வேண்டிய உணவுமுறை, தேர்வுக்காக உடல்நலத்தை தயார்படுத்துவது குறித்து, ’104’ஐ தொடர்பு கொண்டால், உரிய
ஆலோசனைகள் வழங்கப்படும்.

முக்கியமாக, தேர்வை எதிர்கொள்ள பயப்படும் மாணவர்கள், ஞாபக மறதி போன்றவற்றை போக்கி, தைரியமாக தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

தேர்வு நேரத்தில், மாணவர்களிடம், பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஆலோசனை வழங்கப்படும். இந்த சேவை, 24 மணி நேரமும் வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர் தொடர்பு கொண்டால், மனநல மருத்துவர் மற்றும் இரு ஆலோசகர்கள், ஆலோசனைகளை வழங்குவர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...