தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் 1078 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பும், நல்ல உடல் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்:
1078. இவற்றில் 20 சதவீத இடங்கள் காவல் துறையில் போலீசாக
பணியாற்றுபவர்களுக்கும், 10 சதவீத இடங்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அல்லது பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கும், 10 சதவீத இடங்கள் மறைந்த அல்லது பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற அல்லது தொடர்ந்து பணியாற்ற முடியாத காவலர்களின் சந்ததிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.
வயது:
1.7.2015 அன்று பொதுப்பிரிவினர் 20 முதல் 28க்குள். பிற்பட்ட வகுப்பினர் 30க்குள். தாழ்த்தப்பட்டவர்கள் 33க்குள். விதவைகள் 35க்குள். முன்னாள் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்களும், துறை வாரியான விண்ணப்பதாரர்கள் 45 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
உடல் தகுதிகள்:
உயரம் - பொது மற்றும் பிசி, எம்பிசியினர், முஸ்லிம் ஆகியோருக்கு 170 செ.மீ., இதே சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 159 செ.மீ., தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு 167 செ.மீ, பெண்களுக்கு 157 செ.மீ.
எழுத்துத்தேர்வு, உடல் அளவுகள் சரி பார்த்தல், உடல் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு கட்டணம்:
கட்டணமாக ரூ.230ம், போலீஸ் துறையில் உள்ளவர்கள் திறந்த வெளிப்போட்டி, காவலர் ஒதுக்கீட்டிற்கு இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் ரூ.460ம் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அஞ்சல் அலுவலகங்கள், இந்தியன் வங்கி மூலமாகவோ செலுத்த வேண்டும்.
www.tnusrbexams.net என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான எழுத்துத் தேர்வு திறந்தவெளிப் போட்டியில் விண்ணப்பிப்பவர்களுக்கு மே 23ம் தேதியும், துறை வாரியான விண்ணப்பதாரர்களுக்கு மே 24ம் தேதியும் நடக்கிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.3.2015.