மெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி' பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1. சமையலர்:

14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 7). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.


சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

27.2.2015 தேதிப்படி 18 முதல் 25க்குள்.

தகுதி:

மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித் தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

2. சிவிலியன் மோட்டார் டிரைவர்:

91 இடங்கள். (பொது - 48, ஒபிசி - 24, எஸ்சி - 14, எஸ்டி - 5). இவற்றில் 10 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

18 முதல் 25க்குள்.

தகுதி:

மெட்ரிகுலேசனுடன் கனரக வாகன மோட்டார் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

3. முடி திருத்துநர்:

14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 6, எஸ்டி - 1) இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது:

18 முதல் 25க்குள்.

தகுதி:

மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் முடிதிருத்துதலில் முன் அனுபவம்.

4. சலவையாளர்:

14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 7). இவற்றில் தலா ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது:

18 முதல் 40க்குள்.

தகுதி:

மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம். இந்தி மற்றும் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

5. செருப்பு தைப்பவர்/ சாதனங்கள் பழுதுபார்ப்பவர்:

14 இடங்கள். (பொது - 8, ஒபிசி - 5, எஸ்டி - 1). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

18 முதல் 25க்குள்.

தகுதி:

மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான தகுதியுடன் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.

6. தையற்கலைஞர்:

14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 7). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது:

18 முதல் 30க்குள்.

தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.

7. பயர் இன்ஜின் டிரைவர்:

2 இடங்கள். (பொது - 1, எஸ்டி - 1).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

21 முதல் 30க்குள்.

தகுதி:

எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி.

உடற்தகுதிகள்:

உயரம் - ஷூக்கள் அணியாமல்: 165 செ.மீ., மார்பளவு (சாதாரண நிலையில்): 81.5 செ.மீ., (விரிவடைந்த நிலையில்) 86 செ.மீ., எடை: குறைந்த பட்சம் 50 கிலோ.

8. பயர்மேன் நிலை - 2:

53 இடங்கள். (பொது - 27, ஒபிசி - 8, எஸ்சி - 10, எஸ்டி - 8). இவற்றில் 7 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி.

உடற்தகுதி

உயரம்: (ஷூக்கள் இல்லாமல்): 165 செ.மீ., மார்பளவு (சாதாரண நிலையில்): 81.5 செ.மீ. விரிவடைந்த நிலையில் - 86 செ.மீ.,. எடை - 50 கிலோ.

வயது:

18 முதல் 25க்குள்.

9. டெலிபோன் ஆபரேட்டர் (நிலை - 3):

1 இடம். (பொது). இந்த இடம் மாற்றுத்திறனாளிக்கானது.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

தகுதி:

மெட்ரிகுலேசன் மற்றும் பிபிஎக்ஸ் போர்டு கையாள தெரிந்திருக்க வேண்டும்.

வயது:

18 முதல் 25க்குள்.

10. நர்ஸ்/ சிவிலியன் சிஸ்டர்:

1 இடம். (ஒபிசி).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

மெட்ரிகுலேசன் மற்றும் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியதற்கு சான்றிதழ் மற்றும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது:

18 முதல் 45க்குள்.

11. விடுதி கண்காணிப்பாளர்:

1 இடம். (பொது).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. பிளஸ் 2 மற்றும் விடுதி அல்லது உணவு விடுதியை நடத்தியதில் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.

வயது:

18 முதல் 30க்குள்.

27.2.2015 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சட்ட விதிமுறைகளின்படியும் தளர்வு அளிக்கப்படும்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.irfc-nausena.nic.in/modules.php?name=Content&pa=showpage&pid=751 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Flag Officer Commanding in Chief (for CRC),
Headquarters, Eastern Naval Command,
Arjun Block, 2nd Floor,
Navi Base,
Visakhapatnam 530 014.

விண்ணப்பிக்க கடைசி நாள்; 27.2.2015.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...