வனக்கல்லுாரி மாணவர்கள் கடந்த 23 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில், அரசு எவ்வித செவி சாய்க்காததால் கடந்த ஐந்து நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து
வந்தனர். இச்சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்நிலையில், வேளாண் பல்கலை., துணைவேந்தர் ராமசாமி நேற்று மாலை மேட்டுப்பாளையம் வனக் கல்லுாரிக்கு வந்தார். மாணவ, மாணவிகளிடம் தனித்தனியாக பேசினார். மாலை 6.00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1.00 மணி வரை நீடித்தது.

இதில், இன்று ( 22ம் தேதி ) நடக்கும் வனவர் தேர்வை ரத்து செய்து மீண்டும் எங்களுக்கு வனவர் பணிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றனர். ஆனால், இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும், தங்களது தொடர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...