சென்னையில் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளுக்கு அதிகத் தேவை இருப்பதால் பற்றாக்குறை நிலவுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக அரசு
ஊழியர்களுக்கு புதிய வீடுகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் வைத்திலிங்கம் அளித்த பதில்:
அரசு ஊழியர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கான கடனின் உச்சவரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று ஊதியமும் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு ஊழியர்கள் தனியார் வீடுகளை நாடுகின்றனர்.
அரசு ஊழியர் குடியிருப்புகளைப் பொருத்தவரையில், சென்னையில் மட்டும் பற்றாக்குறை நிலவுகிறது. பிற மாவட்டங்களில் வீடுகள் காலியாகவுள்ளன என்றார் அமைச்சர் வைத்திலிங்கம்.