தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆறு இடைத் தேர்தல்களில் வாக்குப் பதிவு சதவீதத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்காட்டில் நடைபெற்ற இடைத் தேர்தலே இதுவரை அதிகபட்ச வாக்குப் பதிவாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மரியம் பிச்சை, சாலை விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுக வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் 61.12 சதவீத வாக்குகள் பதிவாகின.
தொடர் வெற்றியும்-வாக்கு சதவீதமும்:
திருச்சி மேற்கு தொகுதியைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தல்களிலும் ஆளும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கருப்பசாமி, உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு அந்தத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 77.52 சதவீத வாக்குகள் பதிவானது.
இதன்பின்னர், அதே ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. முத்துக்குமரன், சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால், அந்தத் தொகுதியில் 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில், 73.49 சதவீத வாக்குகள் பதிவாகின.
புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்ட அடுத்த ஆண்டே ஏற்காடு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. பெருமாள், உடல் நலப் பிரச்னை காரணமாக உயிரிழந்தார். இதனால், அந்தத் தொகுதிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 89.22 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில், ஆளும் அதிமுக வெற்றி பெற்றது.
இரண்டாம் இடம்:
ஏற்காட்டைத் தொடர்ந்து, ஆலந்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இடைத் தேர்தலில் 73.68 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெள்ளிக்கிழமை (பிப். 13) நடைபெற்ற வாக்குப் பதிவில் 82.54 சதவீத வாக்குகள் பதிவாகின. இது தமிழகத்தில் ஆளும் அதிமுக பொறுப்பேற்ற ஆண்டில் இருந்து (2011) இதுவரை நடைபெற்ற இடைத் தேர்தல்களில் இரண்டாவது அதிகபட்ச வாக்குப் பதிவாகும்.
வாக்குகள் அதிகளவு பதிவான நிலையிலும், எந்த இடங்களிலும் பெரிய அளவுக்கு வன்முறைகளோ, கள்ள வாக்குகளோ பதிவு செய்யப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். 82.54 சதவீத வாக்குகள் என்பது தாற்காலிக சதவீத அளவுதான் எனவும், அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். இறுதி நிலவரம் சனிக்கிழமை காலையில் தெரியும் என்றார்.