பள்ளி வளாகத்தில் வேனில் சிக்கி எல்.கே.ஜி. மாணவன் பலி
பதிவு செய்த நாள்: பிப் 13,2015 14:58
எழுத்தின் அளவு:
நாகர்கோவில்: பள்ளி வளாகத்தில், வேனில் சிக்கி எல்.கே.ஜி., மாணவன் இறந்தான்.
குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்துார் பகுதியை சேர்ந்தவர்
சஜிகுமார். இவரது மகன் உஜ்வல், 3; தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., படித்தவன், தினமும், பள்ளி வேனில் சென்று வந்தான்.
நேற்று காலை, வேனில் சென்று பள்ளி வளாகத்தில் இறங்கி, வகுப்பறை நோக்கி நடந்து சென்றான். அப்போது, பின்னோக்கி வந்த பள்ளி வேன், உஜ்வல் மீது மோதியது. இதில், சிறுவன் தலை மீது வேன் டயர் ஏறி இறங்கியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சிறுவன் உயிர் பிரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டுனர் கண்ணனை கைது செய்துள்ளனர்