சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் வில்வ மரக்கன்றை நட்டு, திட்டத்தை அவர் தொடக்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
நகர்ப்புற வளர்ச்சி, வாகனப் பெருக்கம் போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து வனம், மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் மாபெரும் மரம் நடும் திட்டத்தைச் செயல்படுத்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் ஆலமரக்கன்றை நட்டு தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், கடந்த 2013-ஆம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், 2014-ஆம் ஆண்டு டிஜிபி அலுவலக வளாகத்தில் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், நிகழாண்டு வனத் துறையின் சார்பில் ரூ.53.72 கோடி மதிப்பில் மாவட்டத்துக்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து 375 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் வில்வ மரக்கன்றை அவர் நட்டு வைத்தார். மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் வில்வ மரக்கன்றுகள் நட்டனர்.
இத் திட்டத்தின் கீழ், 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியானது, நிகழாண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். மேலும், இந்த மரக்கன்றுகள் வனப் பகுதிகளிலும், பள்ளிகள், கல்லூரிகளிலும், அரசு, தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்கள், பூங்காக்களிலும் நடப்பட்டு பராமரித்துப் பாதுகாக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆலம், அரசம், பாதாம், புன்னை, மகிழம், சிவகுண்டலம், பூவரசு, பாறை, நாவல், வில்வம் உள்ளிட்ட வறட்சியை தாங்கக் கூடிய பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது