போராட்டத்தை வாபஸ் பெற்ற மேட்டுப்பளையம் வனக்கல்லூரி மாணவர்கள்

தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, மேட்டுப்பளையம் வனக்கல்லூரி மாணவர்கள், நேற்றிரவு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 213 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். காலியாக உள்ள வனச்சரகர் பணியிடத்துக்கு 100 சதவீதம் முன்னுரிமை மற்றும் வனவர் பணியிடங்களில், வனக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை
வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கடந்த மாதம் 27 ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

கோரிக்கை நிறைவேற்றும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையும் துவக்கினர். உண்ணாவிரதம் இருந்தவர்களில் 63 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் , அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், தொடர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று இரவு திடீரென அறிவித்தனர். மாணவர்கள் கூறுகையில், "எங்களது கோரிக்கையினை, கோவை வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் பரிசீலனை செய்து, அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார். அவர் உறுதி அளித்ததன் பேரிலும், செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையிலும், அரசு, கோரிக்கையினை நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...