கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.
கல்விக் கடன் தள்ளுபடி உள்பட மாணவர்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வாசன்
பேசியதாவது:
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னைகளுக்காக தமாகா தொடர்ந்து போராடும். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் தமாகாவில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். கடந்த 15 நாள்களில் மட்டும் 35 ஆயிரம் மாணவர்கள் இணைந்துள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை கிடைக்காதவர்களுக்கு மாநில அரசு வழங்கும் உதவித் தொகையை தாமதமின்றி அளிக்க வேண்டும்.
மத்திய அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் கல்விக் கடனை தாமதமின்றி வழங்க வேண்டும். கல்விக் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து, இனி வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில ரூ. 25 லட்சம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர். இதை முறைப்படுத்தி அதிக மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் படிக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலித்து விட்டு காலம் கடந்து திருப்பித் தருகிறார்கள். எனவே, இந்தத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும், சுய தொழில் தொடங்கவும் பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும்.
சட்டக் கல்லூரி, வனக் கல்லூரி, டிடி மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்னைக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காண வேண்டும்.
அனைத்துப் பள்ளி, கல்லூரிகளையும் ஆய்வு செய்து முறைப்படி செயல்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அங்கீகாரத்துடன் செயல்படும் பள்ளி, கல்லூரிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அரசு வெளியிட வேண்டும் என்றார்.