வெயில் அதிகமானதால் குழந்தைகளை தாக்கும் அம்மை நோய் !

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அம்மை நோய் பாதிப்பு துவங்கியுள்ளதையடுத்து, விழிப்புடன் இருக்க சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டு தோறும் ஏப்., - மே மாதங்களில் வெயில் அதிகளவில் இருக்கும். இந்தாண்டு பிப்., மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த, 10 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி இந்தாலும், பகல் நேரங்களில், கடும் வெப்பம் நிலவி வருகிறது.கோடைக்கால வெப்பத்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டு, ஒரு சில
நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோய். ஒருவித வைரஸ் கிருமியால் உண்டாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. பெரியம்மை, இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சின்னம்மை, மணல்வாரி அம்மை, அம்மைக்கட்டு மற்றும் அக்கி வகையும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்றுநோய்கள். அம்மை நோய்கள், வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பரவும் என்றாலும், குழந்தைகள் தான் அதிகளவு பாதிப்புக்கப்படுகின்றனர். தற்போது அம்மை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விழிப்புடன் இருக்க சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.



மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது: அம்மை நோய் ஏற்படும் முன், தொண்டை வலி, தொண்டை கொப்புளம், தலைவலி, உடல் அசதி, காய்ச்சல் இருக்கும். ஒரு சில நாட்களுக்கு பின் முகம், உடம்பில் கொப்புளங்கள் பரவும். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் மருந்து உட்கொள்ளும் பட்சத்தில், நோயின் தீவிரம் குறைத்து, முழுமையாக குணமடையலாம்.அம்மை நோய்க்குள்ளானவர் மூச்சுக் காற்றின் மூலம், பிறருக்கும் மிக எளிதாக பரவும். நோயாளிகளை தனிமைப்படுத்துவதன் மூலம், மற்றவர்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தலாம். அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. இளநீர், வெள்ளரி, மோர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.நோய் எதிர்ப்பு குறைவு தான், நோய் பரவ காரணம் என்பதால், பழங்கள், காய்கறி, கீரைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்தால், மற்றவர்களுக்கு காய்ச்சல், உடல்சோர்வை வைத்தே, மருத்துவ சிகிச்சை பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...