தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி எதுவும் இல்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் கணேஷ்குமார் பேசும்போது, தமிழக அரசுக்கு 1.78 லட்சம் கோடி வரை கடன் சுமை
இருப்பதாகவும், அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன என்றார்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசியது:-
தமிழக அரசு நிதிநெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகக் கூறுவது தவறான கருத்தாகும். மத்திய அரசு வரையறை செய்துள்ள குறியீட்டு எல்லைக்குள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது.
அதிமுக ஆட்சியைப் பொருத்தவரை வாங்கப்படும் கடன்கள் மூலதன செலவினங்களுக்கு மட்டுமே செலவழிக்கப்படுகின்றன. வீணாகச் செலவழிக்கப்படவில்லை என்றார்.