பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் திங்கள்கிழமை பேசியபோது, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மக்களிடம் அச்சம் இருக்கிறது என்றார்.
அதற்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது, இதுதொடர்பாக பேரவையில் பல முறை தெரிவித்து விட்டேன். பன்றிக் காய்ச்சல் தொடர்பாக பயம் தேவையில்லை. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றார்.
துரைமுருகன் (திமுக): பன்றிக் காய்ச்சல் நோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பற்றி அமைச்சர் இங்கே கூறினார். ஆனாலும் பல இடங்களில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் எனது பேத்தி படிக்கும் பள்ளியிலும் பன்றிக் காய்ச்சல் பரவி உள்ளது.
எனது பேத்திக்கும் காய்ச்சல் வந்ததால் ஊசி மருந்து கிடைக்காமல் நான் கஷ்டப்பட்டு ஊசி போட்டேன். பன்றிக் காய்ச்சலால் அந்தப் பள்ளியை 2 நாள்கள் மூடி விட்டனர்.விஜயபாஸ்கர்: பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 4 லட்சம் "டாமி புளு' மாத்திரைகள் இருப்பு உள்ளன. 20 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்துகளும் உள்ளன. இவை இலவசமாகப் போடப்படுகிறது. மாவட்ட, வட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் மாத்திரைகள் இருப்பில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பன்றிக் காய்ச்சலுக்கான மாத்திரைகள் இருப்பில் உள்ளன.
துரைமுருகன்: நான் கேட்டது தடுப்பூசி மருந்து. அப்படி என்றால் "ஊசி இருக்கு... ஆனால் இல்லை' என்பதுதானே அர்த்தம்.
அமைச்சர் வைத்திலிங்கம்: துரைமுருகனுக்கு ஊசி போட வேண்டுமா? சொல்லுங்கள், உடனே போடப்படும்