கற்கும் பாரத திட்டம் முறையாக செயல்படுத்தப்படுத்துவது குறித்து, யூனியன் வாரியாக மையப்பொறுப்பாளர்களை அழைத்து, சீராய்வு குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.கற்கும் பாரதம் என்ற எழுத்தறிவு திட்டம் செயல்படுகிறது. நகர மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள எழுதறிவற்ற, 15 முதல், 35 வயதுக்கு உட்பட்ட, 30 பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.அங்குள்ள பள்ளிகளில் மாலை, 4 முதல், 8 மணி வரை, 90 நாட்கள் வரை பயிற்சி வழங்கப்படுகிறது.கணிதம், கையெழுத்து, எண் அறிவு
உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உற்று நோக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதற்காக, யூனியன் வாரியாக மையப்பொறுப்பாளர்களை அழைத்து, சீராய்வு குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த சீராய்வு குழு கூட்டத்தில், வெவ்வேறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், யூனியன் வாரியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி, கோபி யூனியனுக்கு திருவண்ணாமலை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் சீராய்வு குழு கூட்டம் நடந்தது.மையப்பொறுப்பாளர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, பார்வையாளர்கள் பதிவேடு, மையப்பொறுப்பாளர்கள் வருகை பதிவேடு, நூல் வினியோக பதிவேடு, தேர்வு பதிவேடு, தேர்வு எழுதுவோர் விபரப் பதிவேடு, கைத்தொழில் முனைவோர் பதிவேடு, வங்கி கணக்கு துவங்கிய பதிவேடு, இருப்பு பதிவேடு, தேர்வு சான்றிதழ் வழங்கும் பதிவேடுகள் என ஒன்று விடாமல் அனைத்தும் ஆய்வு செய்தார்.திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் தலைமையில், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் டி.என்.பாளையம், கோபி, நம்பியூர், தாளவாடி, சத்தியமங்கலம் ஆகிய யூனியனுக்கு சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...