சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் விரை வில் துவங்க உள்ளதால், துறை வாரியாக, கொள்கை விளக்க குறிப்பு தயார் செய்யும் பணியை, அதிகாரிகள் துவக்கி
உள்ளனர்.தமிழக சட்டசபை கூட்டத் தொடர், இம்மாதம் 17ம் தேதி துவங்க உள்ளது.
கவர்னர் உரையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முக்கிய அறிவிப்புகளை, 110வது விதியின் கீழ், சட்டசபையில் அறிவிப்பார்.
இம்முறை, முக்கிய அறிவிப்புகளை, கவர்னர் உரையில் இடம் பெறச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இப்புதிய திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். கடன் சுமை அதிகரித்து, நிதி பற்றாக்குறை ஏற்பட்டுஉள்ளதால், திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அரசு தவிக்கிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதை பொய்ப்பிக்கும் வகையில், பட்ஜெட் தயாரிக்க, அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
கவர்னர் உரையைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் துவங் கும். எனவே, துறை வாரியாக, கொள்கை விளக்க குறிப்புகள், தற்போது செயல்படுத்தும் திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்த விவரங்களை தொகுக்கும் பணியில், துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.