TDS (டி.டீ.எஸ்.), செலுத்த தவறியவர்களுக்கு எதிராக வழக்கு

டி.டீ.எஸ்., வருவாய் வசூல் சரிவடைந்துள்ளதையடுத்து அதை செலுத்த தவறியவர்கள் மீது மின்னணு புள்ளி விவரங்களின் உதவியுடன் வழக்கு தொடர வருமான வரி துறை முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களது

பணியாளர்களிடமிருந்து டி.டீ.எஸ்., முறையில் நேரடியாக வருமான வரியை பிடித்தம் செய்கின்றன. அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை பல நிறுவனங்கள் வருமான வரி துறைக்கு சரியான நேரத்தில் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, டி.டீ.எஸ்., வருவாய் வசூல் சரிவடைந்துள்ளதும் மேற்கண்ட குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதையடுத்தே வருமான வரி துறை வழக்கு தொடரும் முடிவை கையில் எடுத்துள்ளது. மேலும் மத்திய அரசின் ஒட்டுமொத்த நேரடி வரி வசூலில் டி.டீ.எஸ்., பிரிவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். வருமான வரி துறை டி.டீ.எஸ்., பிரிவு தொடர்பான புள்ளிவிவரங்களை உத்தர பிரதேசம் காசியாபாத்தில் உள்ள மத்திய செயல்முறை மையம் (சி.பி.சி., டி.டீ.எஸ்.,) கையாண்டு வருகிறது.


இந்த மைய மதிப்பீட்டின்படி கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் டி.டீ.எஸ்., வசூல் வளர்ச்சி 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2013 - 14ம் நிதியாண்டில், டி.டீ.எஸ்., வசூல் வளர்ச்சி 16.75 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் வெறும் 7.84 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே வருமான வரி துறை தற்போது டி.டீ.எஸ்., செலுத்த தவறியவர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...