தனியாரிடம் சாலை பராமரிப்பு பணி சாலை பணியாளர்கள் 14 ஆயிரம் பேர் டிஸ்மிஸ்?

தமிழக அரசு சாலைகள் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலை துறையில் சாலை  பணியாளர்களுக்கு வேலை இல்லை என்கிற காரணத்தை சுட்டி காட்டி, 14 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்யும் திட்டத்தை மாநில நெடுஞ்சாலை துறை தொடங்கி உள்ளது. தமிழக
நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தேசிய, மாநில, மாவட்ட முக்கிய, இதர சாலைகள் என 62 ஆயிரத்து 17 கி.மீ நீள சாலைகள் உள்ளன. பெருகி வரும் போக்குவரத்திற்கேற்ப அவ்வப்போது இந்த சாலைகளை இரு வழி, நான்கு வழி, பல வழித்தடமாக தரம் உயர்த்துதல், புறவழிச்சாலைகள்  அமைத்தல், புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த சாலைகள் 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு நிதியாண்டிலும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்படுகிறது.  பின்னர், மழை உட்பட பல்வேறு காரணங்களினால்  சேதமடையும் அந்த சாலைகளின் பராமரிப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தான் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, சாலை ஆய்வாளர் முதல் நிலை 600, இரண்டாம் நிலை 1201, சாலை பணியாளர்கள் 14 ஆயிரத்து 872 பேர் என மொத்தம் 16 ஆயிரத்து 673  பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், அரசு ஊழியர்களாக இருந்தாலும், இந்த பணியாளர்களுக்கான ஊதியம் அரசின் கருவூலம் மூலம் வழங்காமல் சாலை பராமரிப்பு பணியின் மூலம்  ஒதுக்கப்படும் நிதியில் தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாலைகளின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஓப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு சாலையில் ஏற்படும்  பள்ளங்கள், புதிதாக சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்து பணிகளும் தனியார் நிறுவனம் மூலம் நடக்கிறது. இதனால், சாலை பராமரிப்பு பணியில்  ஈடுபட்டுவரும் இந்த பணியாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரிமுத்து கூறும் போது, ‘நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தான்  மாநில முழுவதும் சாலைகள் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பணிகளில் 16 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த  பராமரிப்பு பணியையும் தனியாரிடம் ஓப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது.

 இந்த பராமரிப்பு பணிக்கான டெண்டரை எடுக்க முன்னணி நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணியை இந்த நிறுவனத்திடம்  ஓப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தற்போது பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சாலை பணியாளர்கள் அனைவரும் வேலையிழக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. உடனடியாக சாலை பணியாளர்களை டிஸ்மிஸ் செய்ய முடியாது. எனவே, நெடுஞ்சாலை துறையில் பணிகளே இல்லை. இவர் களுக்கு  அளிக்கப்படும் ஊதியம் வீண் என்பதுபோல மாயை உருவாக்கி, அதன் பிறகு அவர்களை டிஸ்மிஸ் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு  செய்துள்ளனர். மேலும், தனியாருக்கு பணியை அளிப்பதின் மூலம் கணிசமான கமிஷன் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இந்த பணியாளர்கள் நலன் கருதி சாலை பராமரிப்பு பணியை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...