பார்வையற்றவர்களுக்கு, பார்வை கிடைக்க செய்யும் நவீன கருவி, இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வந்து விடும்,'' என, சர்வதேச கண் மருத்துவ நிபுணர் ரஜத் அகர்வால் தெரிவித்தார்.
கோவையில் நடந்த செயற்கை கண் அறுவை சிகிச்சை குறித்த, சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற ரஜத் அகர்வால் கூறியதாவது: 'பயோனிக் ஐ' என்பது,
பார்வையற்றவர்களுக்கான ஒரு கருவி. கண் பார்வை இருந்து, பல்வேறு காரணங்களால் பார்வை இழக்க நேரிடுகிறது. இத்தகைய குறிப்பிட்ட பார்வையற்றவர்களுக்கு, இக்கருவி பயன்படுகிறது. கடந்தாண்டு அமெரிக்க அரசு இக்கருவிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில், 25 சதவீதம் பேர் பார்வையற்றவர்கள்; சர்க்கரை நோயால், அதிகளவு பேர் பார்வையிழந்துள்ளனர். உலகளவில், 4,000 பேரில் ஒருவருக்கு பார்வையிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் இது ஆயிரத்தில் ஒருவர் என்ற நிலை உள்ளது. இப்படி பார்வை இழந்தவர்களுக்கு, சிகிச்சைகள் கிடையாது. ஆனால் 'பயோனிக் ஐ' எனும் இக்கருவி, பார்வையை திரும்ப வழங்குகிறது. இக்கருவியில் உள்ள கண்ணாடியின் முன்பகுதியில் கேமரா இருக்கும். இக்கேமரா மூளைக்கு காட்சிகளை கண்ணின் ரெட்டினாவில் பொருத்தப்பட்டிருக்கும், 'சிப்' மூலம் சமிக்ஞைகளாக அனுப்பும். இதன் மூலம் பார்க்க முடியும்.
இதன் விலை அதிகம். இந்திய நோயாளிகளுக்காக குறைந்த விலையில் வழங்க முயற்சி நடக்கிறது. இக்கருவியின் மூலம், பல ஆண்டுகளாக பார்வை இல்லாமல் இருந்தவர்களுக்கு பார்வை திரும்பக் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இக்கருவியை விரைவில் கொண்டு வர, அரசுடன் பேச்சு நடக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வந்து விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.கருத்தரங்கில் சிங்கப்பூர் தேசிய சுகாதார குழு துணை முதன்மை செயல் அலுவலர் லிம் டாக் ஹான், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.