மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை - மார்ச் 15க்குள் துணி அனுப்ப அமைச்சர் உத்தரவு

பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டிய, முதல் இரண்டு சீருடைத் துணிகள், மார்ச் 15ம் தேதிக்குள், சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் கோகுல இந்திரா உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு சார்பில், பள்ளி
மாணவ, மாணவியருக்கு, நான்கு சீருடை வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான துணிகளை, கைத்தறித் துறை நிறுவனம் தயார் செய்கிறது. வரும் கல்வி
ஆண்டு, இலவச சீருடை வழங்குவது தொடர்பாக, கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல் கட்டமாக, இரண்டு சீருடைக்கான துணிகளை, மார்ச் 15ம் தேதிக்குள், அனுப்ப வேண்டும். எனவே, துறை அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், தேவையான துணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் அனுப்பி வைக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...