கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு மீண்டும் வாய்ப்பு

கணினி பயிற்றுநர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு புதன்கிழமை (மார்ச் 4) மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 652 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெற்றது. வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத பணிநாடுநர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 4-ஆம் தேதி அவரவருக்கான மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...